Saturday, May 12, 2018

2015ஆம் ஆண்டில், காற்று மாசுபாட்டால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம


2015ஆம் ஆண்டில், காற்று மாசுபாட்டால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று 'குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஸ்டடி' என்ற ஆய்வு கூறியுள்ளது.

மேலும், இந்த ஆய்வின் தரவுகள், சீனா தொடர்ச்சியாக காற்று மாசுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளால் அங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் அதற்கு நேர்மாறான செயல்பாடுகள் அரங்கேறுவதாகவும், 2015இல் மிகவும் மோசமான நிலை நிலவுவதாகவும் தெரிவித்தன.

இவ்வளவு மோசமான நிலையைப் பற்றித் தெரிந்த பின்னர் 2016இல் ஏதேனும் மாற்றம் வந்ததா?

2016: உலக சுகாதார அமைப்பு, உலகின் மாசடைந்த 20 நகரங்கள் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில், 10 நகரங்கள் இந்தியாவில் இருப்பவை. அதுவும், இந்தியாவில் 94 நகரங்களில் காற்று மாசு பற்றிய எந்த ஆய்வும் செய்யப்படுவதில்லை என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறிய பிறகு வெளியான தகவல் இது. மேலும், குறிப்பிட்ட 29 நகரங்களிலேயே காற்று மாசு ஆய்வு எப்போதும் நடத்தப்படுகிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தது.

இதற்குப் பின்னராவது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா?

2017: ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் காற்று மாசினால் மட்டும் 12 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்று கிரீன் பீஸ் அமைப்பு கூறியுள்ளது. மேலும், இந்த நிலை தொடர்ந்தால் பலி எண்ணிக்கை அதிகமாகும் என்று இந்த அமைப்பு எச்சரித்தது.

2018: இந்த ஆண்டின் முதல் பேரழிவான புழுதிப் புயலையும், அது பலிவாங்கிய உயிர்களின் எண்ணிக்கையையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் புழுதிப் புயல் உருவாவதற்குக் காற்றின் அடர்த்தி அதிகமாக இருப்பதும் முக்கியக் காரணம் என்று சொல்லி, காற்று மாசுபாட்டின் அளவு மேலும் அதிகரித்திருக்கிறது என்ற சான்றை வெளிப்படுத்திவிட்டனர் அறிவியலாளர்கள்.

காற்று மாசுபாட்டால் நிர்மூலமான முதல் மாவட்டம் டெல்லி எனும் பட்டத்துடன் தொடங்கிய இந்த வருடத்தின் கணிப்புகள் விரைவில் வெளியாகும். அவை இவற்றைவிட மிக மோசமான தகவல்களைத் தெரியப்படுத்தும்.

சமீபத்தில், லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த சிடார்ஸ்-சினாய் என்ற மருத்துவ மையம், காற்று மாசு மனிதர்கள் மீது மேலும் எந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை அறிய எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்துள்ளனர். அதன் முடிவில் காற்றில் கலந்துள்ள தொழிற்சாலை தாதுக்களால் எலிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைவதும், கேன்சரைத் தூண்டும் RAC1 செல்கள் உருவாவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காற்றின் மாசுபாட்டு அளவைப் பற்றி இந்த ஆண்டும் கண்டுகொள்ளவில்லை என்றால், மனித வாழ்வாண்டுகளின் எண்ணிக்கை குறைவது நிச்சயம.

No comments:

Post a Comment