புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் குரல் எழுப்புவோம் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.
🏀கரூர் நகராட்சிக்கு உள்பட்ட 46-வது வார்டில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
🏀ஜெயலலிதாவை பொறுத்தவரை மத்தியில் உள்ள ஆட்சியை, கட்சியை என்றும் நம்பவில்லை. நாங்கள் நம்பிக் கொண்டிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை. ஜெயலிலதா உயிரோடு இருக்கும்போது எடுத்த முயற்சியால் காவிரி பிரச்னை விரைவில் தீரும்.
🏀இதற்கான முழுப் பெருமையும் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் சேரும்.
இப்போது சிலர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். வெற்றிடம் என்பது கிடையாது.
🏀அரசியலில் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியானது ஆட்சி நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காமராஜர் ஆட்சியை தவிர பிறகு தொடர்ந்து திராவிடக் கட்சிகள் தான் ஆளுகின்றன.
எந்த ஓர் இயக்கத்திற்கும் அஸ்திவாரம், அடிப்படை வேண்டும்.
🏀தந்தை பெரியார் உருவாக்கிய சமூக நீதியே திராவிட இயக்கத்துக்கு அடித்தளமாக அமைக்கப்பட்டது. அதைத்தான் அண்ணாவும் பின்பற்றினார். எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் தந்தை பெரியார், அண்ணா வழியில் வந்து அரசியல் நடத்திக் காட்டினர்.
🏀புதிய பென்ஷன் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் திட்டம் வந்துவிட்டது என்றால் அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
🏀வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்றார்.
பேட்டியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடனிருந்தார்.
No comments:
Post a Comment